உசிலம்பட்டியில் பிளஸ் டூ மாணவன் மாயம்

உசிலம்பட்டியில் பிளஸ் டூ மாணவன் மாயம்
X
மதுரை உசிலம்பட்ட அருகே பிளஸ் டூ மாணவன் மாயம் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூதிபுரம் ஏ. புதுப்பட்டியை சேர்ந்த பணகுடி 17 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார் .இவர் கடந்த நான்காம் தேதி நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று மதியம் உத்தப்பநாயகனூர் காவல்நிலைத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்
Next Story