பாம்பு கடித்து பெண் பலி.

X
மதுரை திருமங்கலம் சின்ன செங்குளம் கிராமத்தில் வசிக்கும் பெருமாளின் மனைவி ராஜம்மாள்( 53) என்பவர் கடந்த ஆக.2ம் தேதி காலை 8 மணிக்கு சின்ன செங்குளம் கண்மாயில் மரம் வெட்டி கொண்டிருந்த போது விஷப்பாம்பு வலது காலில் கடித்ததில் மயக்கமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராஜம்மாள் நேற்று(ஆக.5) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

