வாகன விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி. சேர்வைபட்டியைச் சேர்ந்தவர்கள் போஸ்ராஜா (36) சின்னன் (36) ஆகிய இருவரும் கட்டட தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் நேற்று (ஆக.5) உசிலம்பட்டியில் பணியை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பி கொண்டிருந்த போது தொட்டப்பநாயக்கனுார் அருகே முன்புறம் சென்ற ஆட்டோவில் இருசக்கர வாகனம் மோதியதில் போஸ்ராஜா உயிரிழந்தார்.மேலும் காயமடைந்த சின்னன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

