போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் ரெனால்ட் கார் ஷோரூம் உள்ளது இந்த ஷோரும் முன் பகுதியில் உள்ள சாக்கடையை மதுரை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்ய மேற்புறம் உள்ள கற்களை அகற்றியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் கற்கள் மூடப்படாமல் உள்ளதால் கார் வேலை செய்ய இன்று ரெக்கவரி வாகனம் மூலம் இறக்கினர். இதனால் காலை 10 மணி முதல் 11.30 வரை கடும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி விரைந்து சாக்கடை சுத்தம் செய்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story





