ஓசூர்: ஓட்டுநரை தாக்கிய தம்பதி கைது.

ஓசூர்: ஓட்டுநரை தாக்கிய தம்பதி கைது.
X
ஓசூர்: ஓட்டுநரை தாக்கிய தம்பதி கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்தவர் மணி (32)டிரைவர். இதே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (36) தொழிலாளி. இவர்கள் உறவினர்கள் மேலும் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகேஷ் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மணியிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை மணி திரும்ப கேட்டுள்ளார். அப்போது நாகேஷ் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே மணியை, நாகேஷ் மற்றும் அவரது மனைவி நீலாவதி (30) ஆகிய இரண்டு பேரும் தாக்கி யுள்ளனர். இதில் காயம் அடைந்த மணி ஒசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஷ் அவரது மனைவி நீலாவதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story