இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் பலத்த காயம்

X
Komarapalayam King 24x7 |6 Aug 2025 5:32 PM IST குமாரபாளையம் அருகே இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் பலத்த காயமடைந்தனர்.
பவானி அருகே லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர்கள் தம்பதியர் அஜித்குமார், 30, மகேஸ்வரி, 25. கூலி. இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 04:30 மணியளவில் வெப்படை சாலையில் அக்செஸ் டூவீலரில் அஜித்குமார் ஓட்ட, மகேஸ்வரி பின்னால் உட்கார்ந்து சென்றார். எதிரில் வந்த பேஷன் புரோ வாகனத்தின் ஓட்டுனர் இவர்கள் வாகனத்தின் மீது, மோத, மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். போலீசார் விசாரணையில் எதிரில் வந்த வாகன ஓட்டுனர் அந்தியூர் சென்னம்பட்டி பகுதியயை சேர்ந்த முருகேசன், 35, என்பது தெரிய வந்தது.
Next Story
