ஷியான் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு

X
நெல்லையில் கவின் ஆணவக் கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கடந்த 31ஆம் தேதி நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேவர் சமூகத்தை அவதூறாக பேசியதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷியான் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் இன்று நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஷியான் மீது முக்குலத்தோர் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story

