கரூர்-வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கரூர்-வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்க்கரசி , வட்டத் தலைவர்கள் பூபதி , பாலசுப்பிரமணி , ஆனந்தன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த கோரியும், 10 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் , 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து , அரசாணை வழங்கியும் அதற்கேற்ப ஊதியம் வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
Next Story





