சங்கர நாராயணன் அலங்காரத்தில் ஆதி சிவன்
மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் இன்று (ஆக.6) மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சங்கரநாராயணன் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான சுப பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story




