மத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.

X
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த சுனி மகன் ஹர்ஷித் (27). இவரது மனைவி ரீனு (27). இவர்கள் இருவரும் பெங்களூரூவில் இருந்து நேற்று மத்துர் அருகே உள்ள கண்ணண்டஅள்ளியில் தனியார் திருமண மண்டபம் அருகில் டூவீலர் வந்த போது பெங்களூரு நோக்கி சென்ற லாரி மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஹர்ஷித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ரீனு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் ஹர்ஷித் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ரீனு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

