தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

X
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த, ஆரம்பாக்கம் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியாக, படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சிறுபாலத்தின் இருபக்கங்களிலும் தடுப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, ஆரம்பாக்கம் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

