மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் பலி

மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் பலி
X
மதுரை திருமங்கலத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் பலியானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்த சீனிவாச ரமணன்( 36) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.இவர் ஆக., 2ல் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த அவர் காயமடைந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் நேற்று (ஆக.6) சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story