வாகன விபத்தில் பெயிண்டர் பலி.

X
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அ.தொட்டியபட்டியை சேர்ந்த திருமேனி( 34,) மாரிக்காளை (34). ஆகிய இருவரும் பெயின்டர்கள். இவர்கள் இருவரும் பெயின்ட் வாங்குவதற்காக நேற்று (ஆக.6) டி.கல்லுப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று திரும்பிய போது டி.குன்னத்துார் அருகே குறுக்கே மிதிவண்டி வந்ததால் பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் திருமேனி உயிரிழந்தார் . மேலும் மாரிக்காளை பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

