மாற்றுத்திறனாளி பெண் மர்மம் மரணம்

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டி கிராமத்தில் 38 வயதான மாற்றுத்திறனாளி பாண்டிச்செல்வி என்பவர் வாய் கொதறிய நிலையில் காயங்களுடன் நேற்று (ஆக.6) மர்மமான முறையில உயிரிழந்தார் ஏற்கனவே திருமணமான பாண்டிசெல்வி மலம்பட்டி அருகே பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமலைச்சாமி என்பவருடன் தனியாக 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.நாய் கடித்து இறந்தாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடித்ததாக கூறப்படும் நாயும் உயிரிழந்து கிடப்பதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

