கரூர்-அதிமுக கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்.
கரூர்-அதிமுக கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம். கரூர் மாவட்ட அரசியல் களத்தில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும் , அதிமுக சார்பில் எம் ஆர் விஜய பாஸ்கரும் மோதல் போக்கோடு அரசியல் செய்து வருகின்றனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பில் இருப்பதால் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அதிமுகவினர் மற்றும் பிற கட்சியில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களையும் திமுகவில் ஐக்கியப்படுத்த ஆர்வம் காட்டி செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திமுக அலுவலகமான அறிவாலயத்தில் அதிமுக கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளரும் , கரூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான பாலமுருகன் தனது ஆதாரவாளர்களுடன் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு செந்தில் பாலாஜி திமுக துண்டை அணிவித்து கட்சி பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார். இதே போல சூரியா கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்து அனைவருக்கும் செந்தில் பாலாஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்ட குடைவிரித்து அதற்குள் நின்று போஸ் கொடுத்தனர்.
Next Story




