மதுரையில் திமுகவினரின் அமைதிப் பேரணி.
மதுரை மாநகர் திமுக சார்பில் இன்று (ஆக. 7) காலை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் இருந்து மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ தலைமையில் திமுகவினரின் அமைதிப் பேரணி சிம்மக்கல் பகுதியில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலை வரை நடைபெற்றது. பேரணியை தொடர்ந்து சிம்மக்கல் பகுதியில் உள்ள கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாநகர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், அனைத்து அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



