திமிரி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

X
திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தை சுற்றி 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிர் செய்து வருகின்றனர். அவர் கள் வியாபாரிகளிடத்தில் போதிய விலை கிடைக்காததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் தாமரைப்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி நடராஜன், துணைத் தலைவர் நளினி கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் மோகனப்பிரியா கோபி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story

