மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு

X
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ் மகன் லிபின் ராஜ் வயது (27) பிளம்பர். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று லிபின்ராஜ் பாறசாலை அடுத்த கொற்றாமம் என்ற பகுதியில் ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்தவரை உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

