சிந்தாமணி அம்மன் கோவிலில் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழாவானது ஜூலை 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று இரவு நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 11ஆம் நிகழ்ச்சியாக விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

