தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை கைது செய்த போலீசார்

X
கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர், நேரு தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன், 58. இவரது மனைவி கற்பகம், 2020ல் தற்கொலை செய்து கொண்டார். தம்பதிக்கு தீபக், 30, கரண், 28, தனுஷ், 22, என, மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில், மூத்த மகன் தீபக்கிற்கு திரு மணம் முடிந்துள்ளது. சகோதரர்கள் மூவரும் பாண்டூர், அய்யனார் கோவில் தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில் தனுஷ், பி ளஸ் 2 படித்து விட்டு, 'டாடா ஸ்கை' நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன், இவர்களது தந்தை குபேந்திரனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, நெருங்கி பழகியுள்ளார். இந்த விஷயம் தெரிந்து, மகன்கள் கண்டித்துள்ளனர்.சமீபத்தில், குபேந்திரனும், அந்த பெண்ணும் வீட்டில் தனிமையில் இருப்பதைப் பார்த்து, தனுஷ் கடுமையாக திட்டி, சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், தனுஷ் தன் பைக்கில், பாண்டூர் சந்திப்பு அருகே வந்து உள்ளார். அப்போது, எதிரே தந்தை குபேந்திரன் வருவதைப் பார்த்து, வாகனத்தை நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். கோபமடைந்த குபேந்திரன், தனுஷை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், அருகே கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து, குபேந்திரன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின், தன்னிடமிருந்த கத்தியால், அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே குபேந்திரன் உயிரிழந்தார். உடனே, தனுஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், பாண்டூர் வீட்டில் பதுங்கியிருந்த தனுஷை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Next Story

