தாராபுரத்தில் மளிகை கடையில் திருட்டு

X
தாராபுரம் சபரி அய்யப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.அவருடைய மகன் மணிகண்டன் இவர் பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே மளிகை கடை நடத்தி வருகின்றார். வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்து திறந்து பார்த்த போது கடையின் சிமெண்ட் சீட் ஆனது பிரித்து மர்ம நபர்கள் கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் காவல் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தார்
Next Story

