முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள்
மதுரை அவனியாபுரம் செம்பூரணி சாலையில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் 10-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமயபுர அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன் பூஜை நடைபெற்றது .பின்னர் பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோவில் சென்று படையல் சாத்தினர். திருவிழாவில் பால்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி. விளக்குபூஜை நடைபெற்றது .1000 அன்னதானம் வழங்கினர். இத்திருவிழாவில் நேற்று (ஆக.6) இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மூலப்பொருள் பூசாரி பன்னீர் மற்றும் அப் பகுதினர் செய்திருந்தனர்.
Next Story




