சூலூரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு : மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முந்தைய அலுவலகம் அதிக கிராமங்களை உள்ளடக்கியதால், மக்கள் விரைவாக பத்திரங்கள் பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதனையடுத்து அலுவலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, புதிய அலுவகம் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அமைச்சர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் வரும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு பெரும் வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக, பத்திரப்பதிவில் பெண்களுக்கு வழங்கப்படும் 1% தள்ளுபடி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது, என தெரிவித்தார். இந்த நிகழ்வில், பதிவுத்துறை மற்றும் வணிகவரி செயலாளர் சில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story



