கோவையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் மெத்தனப் போக்கு - வைரலாகும் வீடியோ!

X
கோவை கணபதி ஆவாரம்பாளையம் அருகே, நியாய விலை கடையிலிருந்து டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் நான்கு மூட்டை ரேஷன் அரிசியை கடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து, கடை நிர்வாகியிடம் கேள்வி எழுப்பியபோது, நிர்வாகிகள் தகுந்த பதில் அளிக்காமல் மிரட்டல் பேச்சை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய கார்த்திகேயன், பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை போன்றவை கிடைக்காத நிலையில், அவை கள்ள சந்தைக்கு கடத்தப்படுகின்றன என புகார் தெரிவித்துள்ளார். ஏழை மக்களின் நலனுக்காக வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

