அமரர் ஊர்தி வராததால் பிணவறையில் பரபரப்பு: மது போதையில் மகன் உடலை காரில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

X
கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஊட்டியை சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். உடல் பிணவறையில் வைத்தபோது, அமரர் ஊர்தி வர வேண்டும் என்பதால் உடலை ஒப்படைக்காமல் வைத்துள்ளனர். இந்த நேரத்தில், மது போதையில் இருந்த அவரது மகன், ஊர்தி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், தன்னுடைய காரை பிணவறை அருகே கொண்டு வந்து, மூதாட்டியின் உடலை காரில் எடுத்துச் சென்றுள்ளார். அதையடுத்து காவலர்கள் துரத்தி, உடலை மீண்டும் பிணவறைக்கு கொண்டு வந்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
Next Story

