கோவை துணிக்கடையில் செல்போன் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே உள்ள மாவீ டெக்ஸ்டைல்ஸ் கடையில் துணி வாங்கும் நபருடன் வந்த ஒரு பெண், மேஜையில் இருந்த கடை ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அந்த காட்சிகள் இன்று வெளியாகியுள்ளது. செல்போன் திருட்டு குறித்து கடை உரிமையாளர் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



