சுயம் திட்டம்: பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – துவக்கி வைத்தார் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ!

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் "சுயம்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் வானதை சீனிவாசனால் தொடங்கி வைக்கப்பட்டது.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் "சுயம்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இலவச தையல் பயிற்சி வகுப்புகளை வடவள்ளி வனவாசி சேவா கேந்திரத்தில் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் மூலம் இதுவரை 1500 பெண்கள் பயிற்சி பெற்று தையல் இயந்திரமும் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், எதிர்வரும் கட்டமாக மேலும் 1500 பெண்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக 17 மையங்கள் செயல்படவுள்ளன என்றும் கூறினார். பயிற்சி முடித்த பிறகு, மத்திய அரசின் "சமத் திட்டம்" மூலம் வழங்கப்படும் சான்றிதழ், அரசு கடன்களை பெறும் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி கிராமம் குறித்து, "மொத்த கிராமமே காலியாகிவிட்டது என்பது தமிழ்நாட்டுக்கு அவமானம்," எனக் கூறிய அவர், மாநில அரசின் ஆதரவு அனைவர் வரை விரிவாக போய்ச் சேரவில்லை என்பதை இது நிரூபிக்கிறது எனக் குற்றம்சாட்டினார். இராஜவாத சிந்தனையோடு செயல்படும் திமுக அரசு அனைவருக்கும் சமமாக இல்லையென அவர் குற்றம்சாட்டி, காவல் துறையில் திமுக தொண்டர்கள் ஈடுபடும் தாக்குதல், தற்கொலை சம்பவங்கள், சட்ட ஒழுங்கு வீழ்ச்சி ஆகியவை பெருகிவருவதை கவலைக்குரியதாகவும் தெரிவித்தார்.
Next Story