உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தூத்துக்குடி மாநகரம் - 1, 13 மற்றும் 20 ஆகிய வார்டுகளுக்கு போல்பேட்டையில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக அதற்குரிய ஆவணத்தை வழங்கினார். 06.08.2025 புதன்கிழமை அன்று நடைபெற்ற இம் முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள் 820, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள் 261, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள் 105, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மனுக்கள் 40, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்ந்த மனுக்கள் 36, எரிசக்தி துறை சார்ந்த மனுக்கள் 39 பொது மருத்துவம் பெண்கள் உட்பட மொத்தம் 1435 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், நாராயணன், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின் ஜெயா, வட்டச் செயலாளர் ராஜாமணி, மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் கலாவதி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story