கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் 7-வது நினைவு நாள் இன்று. தமிழகத்தில் உள்ள திமுகவினர் அனைவரும் இன்று மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் மாநான செந்தில் பாலாஜி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வரை அமைதி ஊர்வலம் சென்று,கரூர் - கோவை சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் , இளங்கோ , சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , துணை மேயர் தாரணி சரவணன் , மண்டல தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர்.
Next Story