வெங்கமேடு-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.
வெங்கமேடு-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்பட்டு தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தனிப்பட்ட தங்களது குறை மற்றும் புகார் அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மனுக்கள் அளித்தால் 45 நாட்களுக்குள்ளாக அவர்களுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வார்டு எண் 3- மற்றும் 7- பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மனுக்கள் அளிக்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார், இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் 45 துறைகள் தொடர்பான மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளாட்சி பிரதிநிதிகள் அப்பகுதியைச் சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமை சிறப்பித்தனர்.
Next Story





