கலைஞர் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்!

கலைஞர் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்!
X
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு தினம்: வடக்கு மாவட்ட திமுக சார்பில் மௌன பேரணி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்பு திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் திமுக தலைவரும் தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் தலைமையில் மௌன பேரணியாக சென்று அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்துடன் மௌன பேரணியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பேரணியாக கேவிகே நகர், 4ம் ரயில்வே கேட், குறிச்சி நகர், வழியாக எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் வந்தனர். அங்குள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிஎம் மதியழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைக் கழக பேச்சாளர் சரவெடி சரத் பாலா, சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் ஏசி செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை மேயர் ஜெனிட்டா, , மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி தியாகராஜ், அன்னலட்சுமி, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், பகுதி செயலாளர் ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், சீனிவாசன், கவிதாதேவி, வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கேபிரியல், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ரவி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சிராணி, பொன்னப்பன், வைதேகி, தெய்வேந்திரன், அந்தோணி கண்ணன், ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், ஜாக்குலின் ஜெயா, சரண்யா, சுப்புலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் மாநகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு வார்டு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story