வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்.

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர். நேதாஜி நகர் பகுதியில் நகராட்சி நடுநிலை பள்ளி பின்பக்க சுவர் இடிந்து விழுந்து அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ சேதம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கழிவுநீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் என்று பார்வையிட்டு மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் நேதாஜி நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தில் பள்ளி அருகில் வீட்டின் முன்பாக நசுருல்லா என்பவர் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ சேதம் அடைந்துள்ளது. அரசு உரய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ரசூல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story

