அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குறுகிய மனப்பான்மையுடன் அதிமுக செயல்படுகிறது-செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு கூறி பேட்டி.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குறுகிய மனப்பான்மையுடன் அதிமுக செயல்படுகிறது-செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு கூறி பேட்டி.
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குறுகிய மனப்பான்மையுடன் அதிமுக செயல்படுகிறது-செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு கூறி பேட்டி. கரூரில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் 179 முகாம்கள் அமைக்க திட்டமிட்டு நேற்று வரை 46 முகாம்கள் நடத்தி 36,632 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சம் 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் என்றார். பொது மக்களின் வரவேற்பை பெற்ற திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளது என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் இது போன்ற முகாமில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறித்து உங்கள் கருத்து ? என்று கேட்டபோது, இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஏதாவது குற்றச்சாட்டு கூறி அரசின் மீது வீண்பழி சுமத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் தமிழகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வளர்ச்சியை எட்டி உள்ளது குறித்து நேற்றைய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையாமல் தடுக்க குறுகிய மனப்பான்மையோடு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உச்ச நீதிமன்றத்தை நாடி தடையாணை பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் நீதி அரசர்கள் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அரசியல் கால்ப் புணர்ச்சிக்காக அதிமுக இது போன்ற குறுகிய மனப்பான்மையுடன்பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் அமையும் என தெரிவித்தார்.
Next Story