வடகரையாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

வடகரையாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
X
.வடகரையாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி.
பரமத்தி வேலூர், ஆகஸ்ட்.7: பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் துர்கா மூர்த்தி. முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முகாமில் பெற்றுக்கொண்ட அந்த மனுக்களை கணினியில் பதிவுசெய்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அதற்கான தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துர்கா மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் தளபதி சுப்பிரமணியம், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணகுமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாமிநர்தன்,கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண்,கபிலர்மலை ஒன்றிய திமுக தகவல் தொழிலநுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ், பரமத்தி வேலூர் தாசில்தார் முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி மலர்விழி, கபிலர்மலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜா, 20 ஊராட்சிகளை சேர்ந்த செயலர்கள், ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story