முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சி
திமுக முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் ஏழாவது நினைவு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரு உருவப் படத்திற்குநாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை. தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் சென்று நகராட்சி வளாகம் அருகே நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தாண்டவன், நகர அவைத் தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராஜவேல்,மாவட்ட விவசாய அணி நிர்வாகி முன்னாள் ஒன்றிய செயலாளர் சேரன் சக்திவேல்,எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல், நகர மகளிர் அணி அமைப்பாளர் கண்ணாம்பாள், நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி புவனேஸ்வரி உலகநாதன் சண்முகவடிவு ராதா சேகர், சினேகா ஹரிகரன், ராஜா,டிஎன் ரமேஷ், தாமரைச்செல்வி மணிகண்டன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் பாவாயி, எஸ்.வி. ராஜேந்திரன் மற்றும் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர்,சார்பு அணி நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story