பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
X
பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு திமுகவினர் ஊர்வலம்.
பரமத்தி வேலூர், ஆகஸ்ட்.7: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில்  அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பரமத்தி வேலூர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் வேலூர் நான்கு ரோட்டில் துவங்கி திருவள்ளூர் சாலை, அண்ணா சாலை வழியாக சென்று வேலூர் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் திமுக நகர செயலாளர் முருகன்,மாவட்ட விளையாட்டு மேம்பட்டு அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர்,செல்லப்பா செந்தில் உட்பட்ட மாவட்டம், ஒன்றியம்,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story