காட்பாடியில் கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு!

X
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், வடக்கு பகுதி செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

