அணைக்கட்டில் வி.ஏ.ஓ-க்கள் ஆர்ப்பாட்டம்!

X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என பெயர் மாற்றம் செய்து அதற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

