ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு

ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி  பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு
X
ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு
திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு மழை பெய்யும் போதெல்லாமல் தொடர்கதையாகவும் கழிவுநீர் கலப்பு, அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்படுவதாக விவசாயிகள் வேதனை திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதால், மாராப்பட்டு பகுதியில் பாலாறு நுரை பொங்கி ஓடுகிறது.. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து புல்லூர் வழியாக தமிழகத்திற்கு வரும் பாலாறு திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதரமாக உள்ளதாகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக செல்லும் இந்த பாலாறு படுக்கையில் சுமார், 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இருப்பதாகவும்,பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதால் விவசாய நிலங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் 1200 டிடிஎஸ் அளவிற்கு கீழ் குறைந்துள்ளதாக, பாலாற்று நீர் குடிக்க கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் பாலாற்றில் தோல் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்த நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும், மேலும் பாலாற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், பாலாறு துர்நாற்றத்துடன் ஓடுவதாகவும், , இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் பாலாற்றில் தோல் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story