மின் ஊழியர் மாநாடு, வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடர் பயணக் குழுவுக்கு வரவேற்பு 

மின் ஊழியர் மாநாடு, வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடர் பயணக் குழுவுக்கு வரவேற்பு 
X
மின் ஊழியர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 18 ஆவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கடலூரில் நடைபெறுகிறது.  மாநாட்டிற்கு, வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடர், ஆக.6 ஆம் தேதி காலை வெண்மணி தியாகிகள் நினைவகத்தில் இருந்து, கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ எடுத்துக் கொடுக்க, பயணக் குழு தலைவர் எஸ்.ரங்கராஜன்  தலைமையில் கடலூர் செல்கிறது.  நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு வந்த கொடிப்பயணக் குழுவுக்கு பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிறைவாக பயணக் குழுவிற்கு, தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகில்  சிஐடியு மாவட்டக் குழுவின் சார்பில் மாநில செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் து.கோவிந்தராஜூ,  மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ஹெச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் யோகராஜ், விசிறி சாமியார் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பேர்நீதிஆழ்வார், கே.அன்பு, கே.வீரய்யன், மில்லர் பிரபு, மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் பி.காணிக்கை ராஜ், தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ் ,திருவாரூர் திட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை திட்ட செயலாளர் வெற்றி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story