பேராவூரணியில் கிராம நிருவாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

பேராவூரணியில் கிராம நிருவாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, புதன்கிழமை மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பேராவூரணி வட்டார செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கிராம நிருவாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிராம நிருவாக அலுவலர் பணிக்கு கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். பத்தாண்டு பணி முடித்த கிராம நிருவாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிருவாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிருவாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வழங்கியும், அதற்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் துணைத் தலைவர் கண்ணன், வட்டாரத் துணைச் செயலாளர் விக்னேஷ் சர்மா, பொருளாளர் கார்த்திக், கொள்கை பரப்புச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.  நிறைவாக கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கலந்து கொண்டனர்.
Next Story