சேதுபாவாசத்திரம்  பேருந்து நிலையம், கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரிக்கை 

சேதுபாவாசத்திரம்  பேருந்து நிலையம், கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரிக்கை 
X
கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 17 ஆவது ஒன்றிய மாநாடு புதன்கிழமை மாலை ஒன்றியத் தலைவர் ஏ.மேனகா தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியச்  செயலாளர் ஏ.எஸ்தர் லீமா வரவேற்றார். தஞ்சை மாவட்டச் செயலாளர் இ.வசந்தி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் டி.சரோஜா செயற்குழு உறுப்பினர் பி.ஜெயந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி நிறைவுறையாற்றினார்.  இதில், புதிய ஒன்றியத் தலைவராக ஏ.எஸ்தர் லீமா, ஒன்றியச் செயலாளராக கே.மகேஸ்வரி, ஒன்றியப் பொருளாளராக எஸ்.ஜாக்லின், துணைத் தலைவராக ஏ.மேனகா, துணைச் செயலாளராக எஸ்.அம்பிகா உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.  இம்மாநாட்டில், "சேதுபாவாசத்திரம் கடைவீதியில் உள்ள பேருந்து நிலையம், கழிப்பறை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடற்கரை கிராமங்களில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்ற வேண்டும்.  100 நாள் வேலையை 250 நாளாக உயர்த்தி, தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த சட்டக்கூலி ரூபாய் 336 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். குடிமனை இல்லாதவர்களுக்கு, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய வேண்டும்.  பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1,000 விடுபட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும். நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story