அரசுக்கல்லூரி மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

அரசுக்கல்லூரி மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
X
அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதிக்கு, ரூ.58.41 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை புதன்கிழமையன்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. திறந்த வெளியில் இருப்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.  நிகழ்வில், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் (பொ) சி.ராணி, மாணவியர் விடுதி காப்பாளினி கவிதா, பொதுப்பணித்துறை (கட்டடம்) உதவி செயற்பொறியாளர் எம்.சதீஷ்குமார், உதவிப் பொறியாளர் ஆர்.ஹரிதரன், முடச்சிக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலெட்சுமி காளிமுத்து, பூமிநாதன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story