தஞ்சாவூர் மாவட்டத்தில், மக்காச் சோளப்பயிருக்கு மானியத்தில் இடுபொருள்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில், மக்காச் சோளப்பயிருக்கு மானியத்தில் இடுபொருள்கள்
X
இடுபொருள்கள்
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், பூதலூர் மற்றும் பேராவூரணி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  மக்காச்சோளத்தை பொருத்தவரை, மக்களிடையே உணவு தானியமாக மிகச் சிறிய அளவிலேயே பயன்பாட்டில் இருந்தாலும், கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியில் குறிப்பாக கோழித் தீவன உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  இதனால் மத்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், கடந்த ஆண்டு முதல் இப்பயிர் முக்கிய அங்கம் வகிக்கிறது. விதைப்பு முதல் அறுவடை வரை குறைந்த தொழிலாளர்கள் பயன்பாட்டை கொண்ட பயிராகவும், பூச்சி நோய் தாக்குதல் குறைவாக உள்ள பயிராகவும் உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தானியமும் தட்டும் தீவனமாக பயன்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் இப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீரிய ஒட்டு ரக மக்காச்சோளத்தில் அதிக மகசூலும், கூடுதல் விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மக்காச்சோள பயிர் இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றதாகவும் உள்ளது.  எனவே, சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தஞ்சாவூர், பூதலூர் 50 தொகுப்புகள் மற்றும் பேராவூரணி வட்டாரத்தில் வரும் ராபி பருவத்தில் வழங்கப்படவுள்ளன.  இத்தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, நுண்ணுயிர் உரம், நானோ யூரியா, இயற்கை உரம் ஆகியவற்றைக்கொண்ட ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story