சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு - கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு - கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததைக் கண்டித்தும், நீண்ட போராட்டத்திற்குப் பின் ‌ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, செவ்வாய்க்கிழமை மாலை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தஞ்சாவூர் பொறுப்பாளர்  அப்துல் நசீர் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலச் செயலாளர்  பி.செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் கோஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், அருட்தந்தை விக்டர் தாஸ், அருட்தந்தை சூசைப்பால்,  மக்கள் ஒற்றுமை மேடைஅ இரா.புண்ணியமூர்த்தி,  இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர்  துரை.மதிவாணன், மற்றும் ஜாகீர் உசேன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  ஜனநாயகம், மத நல்லிணக்கம், சகோதரத்துவத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Next Story