கோவில் பூசாரி மர்ம நபர்கள் வெற்றி படுகொலை!

கோவில் பூசாரி மர்ம நபர்கள் வெற்றி படுகொலை!
X
தூத்துக்குடியில் கோவில் பூசாரி மர்ம நபர்கள் வெற்றி படுகொலை செய்யப்பட்டார்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் டெய்லராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி முத்து விஜயா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஏரல் அருகே உள்ள சொத்து பலங்கரை கிராமத்தைச் சேர்ந்த பூசாரியான ரவி என்பவருக்கும் முத்து விஜயவிற்கும் கோவிலுக்கு செல்லும் பொழுது பழக்கம் ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக முத்து விஜயா மற்றும் முத்துராமலிங்கம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர் இதைத்தொடர்ந்து முத்து விஜயா கடந்த நான்கு ஆண்டுகளாக கோயில் பூசாரியான ரவியுடன் சேர்ந்து வாழ துவங்கியுள்ளார் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தனது குழந்தைகளுடன் முத்து விஜயா மற்றும் ரவி ஆகியோர் சோட்டையன் தோப்பு அருகே உள்ளஆ சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர் ரவி தூத்துக்குடி மூறாம் மயில் பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று இரவு சுமார் 9:30 மணி அளவில் தனது வீட்டிற்க்காக சோட்டயன் தோப்பு மெயின் ரோட்டில் பல்க் எதிரே உள்ள ஒரு பாஸ்பபூட் கடையில் தனது குழந்தைகளுக்கு சிக்கன் 65 வாங்குவதற்காக சென்றுள்ளார் அப்போது சிங்கன் வாங்கிக் கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனம் மற்றும் நடந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ரவியை அருவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது இதில் சம்பவ இடத்திலேயே ரவி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார் இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் மற்றும் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தூத்துக்குடியில் கோயில் பூசாரி இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயில் பூசாரி ரவியை யார் வெட்டி கொலை செய்தனர் எதற்காக வெட்டி கொலை செய்தனர் வேறு ஏதும் முன் விரோதம் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story