ஜமீன் ஆத்தூரில் தகாத உறவால் தடுமாறி போன வாழ்க்கை. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

ஜமீன் ஆத்தூரில் தகாத உறவால் தடுமாறி போன வாழ்க்கை. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
ஜமீன் ஆத்தூரில் தகாத உறவால் தடுமாறி போன வாழ்க்கை. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா , ஜமீன் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 38. ஆத்தூர் பகுதியில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்ணுடன் தகாத உறவு கடந்த இரண்டு மாதங்களாக செல்வத்திற்கு ஏற்பட்டது. இதனிடையே அந்த இளம் பெண் அவரது கணவனுடன் சென்று விட்டதால் செல்வம் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த செல்வம் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த செல்வத்தின் தந்தை துரைப்பாண்டி வயது 72 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர் உயிரிழந்த செல்வத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story