டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்

டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
X
நாகர்கோவில்
நாகர்கோவில், வடசேரி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபரை கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாலிபர், தான் போலீஸ் என கூறி மது கேட்டதாகவும் பணம் தரவில்லை என்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
Next Story