சட்டக் கல்லூரி, கால்நடை கல்லூரியில் இடம் கிடைக்காததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
சட்டக் கல்லூரி, கால்நடை கல்லூரியில் இடம் கிடைக்காததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் தனுஷ் வயது 19. இவர் தற்போது மதுரையில் உள்ள அல்ட்ரா காலேஜில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் தனக்கு சட்டக் கல்லூரி அல்லது கால்நடை கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து கிடைக்காததால் மனவேதனையுடன் இருந்து வந்த தனுஷ் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை அறிந்த அவரது தந்தை ரமேஷ் வயது 47 என்பவர் தனது மகனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அங்கு தனுசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாங்கல் காவல்துறையினர் உயிரிழந்த தனுஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
Next Story






