மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில் இருவர் கைது

மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில் இருவர் கைது
X
மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில் இருவர் கைது
மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த முதுகரை பகுதியில், கல்வி பயின்ற பள்ளி மாணவியை, பள்ளி கோடை விடுமுறையில், அவரது பெற்றோர்களே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இது குறித்து பள்ளி மாணவி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து, பள்ளி ஆசிரியை, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் மாணவியரிடம் விசாரித்து உள்ளனர். மாணவி அளித்த தகவலின் பேரில், மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மற்றும் செல்வம் ஆகியோரை மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார், கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Next Story